40ஆண்டுக்கு மேலாக ரூ.5க்கு மருத்துவம் பார்த்த திருவேங்கடம் உயிரிழப்பு!

சென்னையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் திருவேங்கடம் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். 1973ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த மருத்துவர் திருவேங்கடம் ஆரம்ப காலத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். சில காலத்திற்கு பிறகு 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார். காலை 5 மணி முதல் 12 மணி வரை எருக்கஞ்சேரியிலும், மாலை 7:30 மணி முதல் இரவு 9 மணி வரை வியாசர்பாடியிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் மருத்துவர் திருவேங்கடம் மரணமடைந்தார். ஏழைகளின் எளிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மரணம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version