உலக பிரசித்திப் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளதையொட்டி இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகபுகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் ஆழிதேர் 300 டன் எடை மற்றும் 96 அடி உயரம் கொண்டது. ஆசியாவிலேயே மிகபெரிய தேர் என்னும் சிறப்பையும் இத்தேர் பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளை சுற்றி வலம் வரும் தேர், மாலை புறப்பட்ட இடத்திற்கு வந்தடையும். தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மருத்துவ ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.