திருவாரூர் ஏதோ கருணாநிதியின் கோட்டையாமே? அப்படியா. அதெல்லாம் ஒன்றுமில்லை.
ஒருவேளை கருணநிதியின் கோட்டை என்றால் எத்தனை முறை அங்கு கருணாநிதி வென்றிருக்கிறார்.
1957 முதல் 2018 வரையில் 60 ஆண்டுகால அரசியல் வாழ்வில் எத்தனை முறை திருவாரூரில் வென்றிருக்கிறார். அல்லது நின்றிருக்கிறார். நீங்கள் நம்பமாட்டீர்கள் வெறும் இரண்டே இரண்டு முறைதான். அதுவும் தான் தீவிர அரசியலில் இருந்த காலகட்டத்தில் அல்ல. தன் கடைசிகாலத்தில்.குளித்தலையில் தொடங்கி திருவாரூரில் முடிந்த அரசியல் வாழ்வில் கடைசி 6 ஆண்டுகள் தான் திருவாரூர் பற்றி நினைப்பே வந்திருந்தது இவருக்கு. தன் சொந்த ஊர் என்கிறபடியால் கையிலங்கு பொற்கிண்ணமாய்த் தெரிந்தது போலும்.
கொஞ்சம் 1962 தேர்தலை திரும்பப்பார்த்தால் உண்மை விளங்கும். உண்மையில் அந்தத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டது திருவாரூரில் அல்ல. அதற்குப் பக்கத்திலிருக்கும் தஞ்சாவூரில்.இதற்கு சிலர் சொல்லும் வியாக்கியானங்கள் விளையாட்டாய்க்கூட சிரிப்பை வரவழைப்பதில்லை. அதாவது அவர் பிறந்த மண் என்பதால் அவர் சார்ந்த திமுகவிலிருந்து யாரை நிறுத்தினாலும் வெல்வார்களாம்.
கொஞ்சம் வரலாறு சொல்வதப் பார்த்தால் அதே சமயம் 1962ம் ஆண்டு திருவாருரில் அந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் சி.எம்.அம்பிகாபதிதான் வெற்றிபெற்றார்.1967 தேர்தலிலும் இதே நிலைதான். திருவாரூரில் மார்க்சிஸ்ட் கட்சி பி.எஸ் தனுஷ்கோடி வெற்றிபெற்றார். ஆனால் கருனாநிதி கடந்தமுறை வென்ற தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை ஏ.ஒய்.எஸ் பரிசுத்த நாடார் வெற்றி பெற்றார்.இந்த முறை சொந்த ஊரை விட்டு வெகுதூரம் போயிருந்தார் கருணாநிதி. சென்னை சைதை தொகுதியில் நின்றிருந்தார்.
அதற்கடுத்து 1971ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் நடந்த பிறகு நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த முதல் தேர்தலிலும் கூட கருணாநிதி திருவாரூர் பக்கம் வந்ததாயில்லை.1984 மாண்டு தேர்தலில் எங்கே எம்ஜிஆரிடம் தோற்றுப்போவோமோ என்றும், இந்திரா காந்தி கொலையால் காங்கிரஸ்க்கு ஏற்பட்டிருந்த அனுதாப அலையும் சேர்ந்து படுத்திய பாட்டில் எந்தத் தொகுதியிலும் நிற்கவில்லை.தன்னால்பேசமுடிந்த போதெல்லாம் பேசிப்பேசி மக்கள மயக்கி ஒட்டுவாங்க முடிந்த கருணநிதிக்கு பேச முடியாத ஓடியாட முடியாத நிலை வருகிறபோது தன் சொந்த ஊர் பாசத்தை காட்டினார். அதற்குப்பிறகு அந்த ஓடியாடி அவர் உழைத்தது சொல்லி மாளாதது.
அதிலும் இந்தக் கதையை மக்கள் உணரும்வரைக்கும்தான் திமுகவின் கோட்டை திருவாருர் என்று கதையளக்க முடியும். திருவாரூர் ஒன்றும் கருணாநிதியின் கோட்டை அல்ல.
Discussion about this post