திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5ம் நாளில் நடைபெற்றது

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5ம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார், பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா பவனி நடைபெற்றது…

அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கடந்த 1ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 10ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.தீபத்திருவிழாவின் 5ம் நாளான நேற்று இரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Exit mobile version