"செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு"-ஆரணி, வந்தவாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆரணி – வந்தவாசி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆரணி அடுத்த ஆவணியாபுரம் செய்யாற்றின் குறுக்கே 1852ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் செய்யாற்று அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த தடுப்பணை அருகே பொதுமக்களின் போக்குவரத்துக்காக மேம்பாலமும் கட்டப்பட்டது.

இந்நிலையில், தொடர் கனமழையால் செய்யாற்று அணைக்கட்டு நிரம்பியதை அடுத்து, அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், செய்யாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தடுப்பணை மேம்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்வதால், ஆரணி – வந்தவாசி நெடுஞ்சாலையில் பாதசாரிகள் மற்றும் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version