திருவண்ணாமலை மாவட்டம் வெளூகனந்தல் கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தர்பூசணி பயிரிட்டதில் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பல ஆண்டுகளாக தர்பூசணி பயிரிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளாக தனது ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணியை பயிரிட்டு வருகிறார் கமலக்கண்ணன் என்ற விவசாயி. சொட்டு நீர் பாசனத்துக்கான உபகரணங்களை அரசு மானிய விலையில் வழங்கியதால், செலவு பெருமளவில் குறைந்து இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 60 நாட்கள் பயிரான தர்பூசணியை ஒரு ஏக்கரில் 15 டன் முதல் 20 டன் வரை அறுவடை செய்வதாகவும், ஒரு டன் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலைப் போவதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.