திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து 2 நாட்களாக பெய்த மழையால், ஏரி குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல், நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் 100 நாள் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டது. கடந்த இரு தினங்களாக பெய்த தொடர்மழையால், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருவதால், சம்பா சாகுபடிப்பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.