திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. தீபத்திருவிழாவுக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் கார்த்திகை திருநாளையொட்டி தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.
நவம்பர் 29-ஆம் தேதி அன்று அதிகாலை கோயில் முன்பகுதியில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான முதல்கட்டப் பணிகளுக்கு பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறப்பு வழிப்பாட்டைத் தொடர்ந்து, மந்திரம் முழங்க பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இனை அணையர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.