திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கழிவுநீர் செல்ல தனி வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலத்தின் போது ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிரிவலப் பாதையில் நடை பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாயு லிங்கம் எதிரில் உள்ள காசோலை பகுதியில் கழிவுநீர் செல்ல முறையான நடவடிக்கை எடுக்கவிலை என கூறப்படுகிறது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கழிவுநீர் செல்ல தனி வாய்க்கால் அமைக்க வேண்டும் என மாவட்ட நிவாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.