"அருணாசலேசுவரர் கோயிலில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி"

திருவண்ணாமலை கோயிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, கிரிவலம் மட்டும் செல்ல இன்றும் நாளையும் தினசரி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே கிரிவலம் செல்வதற்கு அனுமதி அட்டை வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அனுமதி அட்டையை பயன்படுத்தி கிரிவலம் செல்வதற்கு மட்டுமே அனுமதி என்றும், மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு அளிக்கப்பட்ட அனுமதி சீட்டினை வேறு ஒருவர் பயன்படுத்தி கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கிரிவலம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Exit mobile version