திருவள்ளூர் காவல்துறையில் பணியாற்றி உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு பணிநியமன ஆணை

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி பணியின் போது உயிரிந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வருவாய்த்துறையில் பணி நியமன ஆணையை வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2003 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணையை திருவள்ளூர் மாவட்ட வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காவலர்களின் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான நியமன ஆணையைப் பெற்ற பாரதி என்ற பெண் கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கிய தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version