ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்,பெல்லி காணுகா கிராம பகுதியில் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 18 லட்சம் மதிப்புடைய 18 செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தமிழகத்தை சேர்ந்த செல்வராஜ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொண்ணு சுவாமி மற்றும் அருணாச்சலம் உட்பட 5 பேரை கைது செய்தனர்.