திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி ஆலயத்தில் கிரீடங்களை திருடிய கொள்ளையனை ஆந்திர போலீசார் கைது செய்தனர்
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது கோவிந்தராஜ சுவாமி கோவில். இந்த கோவிலில் பாதுகாப்புகள் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் , உற்சவருக்கு அலங்கரிக்கக் கூடிய மூன்று கிரீடங்கள் காணாமல் போயின. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருப்பதி போலீசார் சிசிடிவி உதவியுடன் திருடனை தேடி வந்தனர்.
6 தனிப்படை போலீசார் பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். இறுதியாக தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் 2010ம் ஆண்டு பூட்டை உடைத்து திருடிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே சென்ற ஆகாஷ் பிரகாஷ் என்பவர் இந்த வழக்கிற்கு தொடர்புடையவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேணிகுண்டாவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கிரீடத்தை உருக்கி தனியாக எடுக்கப்பட்ட தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்