திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகத்தில் வைர கவசம் அணிந்து வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் சுவாமி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த ஜேஷ்டாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு 3 நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது.
உற்சவர்களுக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post