பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனுக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் வரம்பு மீறி, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து பேசினார். நெல்லைக் கண்ணனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. நெல்லைக் கண்ணன் வீட்டு முன்பாக கூடிய பொது மக்கள், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, பெரம்பலூரில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நெல்லை கண்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை, நேற்று விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.