பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க மூத்த தலைவர்கள் எதிர்ப்பு – தமிழ்நாடு காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை மீண்டும் பிரதமராக முன்னிறுத்த அக்கட்சியின் மூத்த தலைவர்களே எதிர்ப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கக் கூடாது என யஷ்வந்த் சின்கா, அத்வானி போன்ற பாஜக மூத்த தலைவர்கள் எதிர்த்து வருவதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையவுள்ளதாக கூறிய அவர், அதற்கான முயற்சிகளில் மாநில கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version