ஊரடங்கு காரணமாக நிதி சுமையை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருவார்கள். ஊரடங்கு காரணமாக, திருப்பதி திருமலையில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உண்டியல் வருவாய் கிடைக்கவில்லை என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிதி சுமையை சமாளிக்க பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிடமும், தேவஸ்தான தொடர்புடைய கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் நிதியை பெற திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version