கம்போடியா நாட்டின் பாடத் திட்டங்களில் உலகப் பொதுமறை எனப் போற்றபடும் திருக்குறளை சேர்க்க, அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருக்குறள் பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள சூழலில் தற்போது கம்போடிய அரசின் பாடத் திட்டங்களில் இடம்பெறவுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான பாரம்பரிய உறவை பறைசாற்றும் விதமாக 25 கோடி ரூபாய் செலவில் ராஜேந்திர சோழன் மற்றும் கம்போடிய மன்னன் சூர்ய வர்மனுக்கு சிலைகள் அமைக்க உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள் இந்தியாவிற்கு வந்து இருநாடுகளுக்கு இடையேயான கலாச்சார தொடர்பை ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.