திருக்குறள் அதி அற்புதமான பொக்கிஷம் : பிரதமர் மோடி!

திருக்குறள் உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில், லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மறமானம் மாண்ட என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். இந்தநிலையில், வார இதழ் ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டி தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என தெரிவித்துள்ளார். உயரிய சிந்தனைகள், உன்னத குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் என புகழ்ந்துரைத்துள்ளார். தெய்வப் புலவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும், ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என கூறியுள்ளார். இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்து பயனடைவார்கள் என தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version