திருக்கார்த்திகை தீபத் திருவிழா: நெல்லையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்காக வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி சன்னதி அருகே மகா மண்டபத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு திருக்கார்த்திகை ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை தீபம் கொளுத்தப்படுகிறது.

Exit mobile version