திருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருமணமான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் இவரது மனைவி வனிதா என்கின்ற சோபனா. சோபனா திருச்செங்கோட்டில் உள்ள சுபானா என்ற பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். 29 வயதான சோபனாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 19ம்தேதி காலை வேலைக்கு சென்ற சோபனா நீண்டநேரமாகியும் வீட்டுத்திற்கு வராத காரணத்தால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் விசாரித்து விட்டு 20 ஆம் தேதி காலை மொளசி காவல் நிலையத்தில் சோபனா வீட்டார் புகார் செய்துள்ளனர் .இதனையடுத்து திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளிபாளையம் பகுதியில் ஒரு குட்டையில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து மொளசி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலம் இறையமங்கலத்தைச் சேர்ந்த வனிதா என்கின்ற சோபனா என்பது தெரியவந்தது.

இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குச்சிக்கிழங்கு காட்டில் மகனுக்கு வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. ஷோபனா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி நடத்திவந்தனர். பிரோ பரிசோதனையில் சோபனா பாலியல் பலாத்காரம் செய்யப் படவில்லை என்பதும், கழுத்தை நெறித்து கொல்லப் பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்டையில் நடத்திய விசாரனையில், சோபனா வேலை பார்த்து வந்த பியூட்டி பார்லர் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கடை நடத்தி வந்த சுரேஷ்க குமாருடன் சோபனாவுக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பு கடந்த ஆறுமாதமாக நீடித்து வந்தது இருவரும் மனம் விட்டு பேசி மட்டுமே வந்தோம். இதே வேலையில்நான் வேறு சில பெண்களிடம் பேசி வந்தது பிடிக்காமல் சோபனா தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி சோபனா ஊருக்கு செல்லும் கடைசி பஸ்சை தவற விட்டு விட்டதாகவும் தன்னை இறையமங்கலத்தில் இறக்கி விடும் படியும் சுரேஷ்குமாரிடம் கேட்டிருக்கிறார்.அதை தொடர்ந்து தனது ஸ்கூட்டரில் சோபனாவை அழைத்து சென்ற போது வேறு பெண்களுடன் பேசக்கூடாது என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் என சுரேஷ்குமாரிடம் சோபனா வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாக்குவாதம் முற்றி சுரேஷ் ஷோபனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு அவரது சடலத்தை அருகில் இருந்த குட்டையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கொலையாளி சுரேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.தகாத உறவால் தற்போது இரு குடும்பங்களும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version