திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் இருக்கும் முக்கிய நகரங்களிலும், அண்டை மாநிலங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

மோப்ப நாய் மியா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆறுமுகவிலாச விடுதிகள், கோயில் கிரிவல பிரகாரங்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதியில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கோயில் உள்பிரகாரத்தில் 40 சி.சி.டி.வி. கேமிரா மூலமும், கோயில் பிரகாரத்தில் 33 கேமிராக்கள் மூலமும் சந்தேகப்படும் படியான நபர்களை போலீசார் நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version