தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலுக்கு தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி தூக்கியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவதால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.