மாநில முதலமைச்சர்கள் உடனான பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிறப்பு நிதியாக இரண்டாயிரம் கோடி ரூயாபை ஒதுக்க கோரிக்கை வைத்தார். இதே போல் மேலும் சில மாநில முதல்வர்களும், நிதி ஒதுக்க பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு 6ஆயிரத்து 157 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு 335 கோடியே 41 லட்சம் வழங்கப்படுவதாகவும், கேரளாவிற்கு ஆயிரத்து 276 கோடி ரூபாயும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு 952 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 638கோடி ரூபாய் பஞ்சாப் மாநிலத்திற்கும், அஸ்ஸாம் மாநிலத்திற்கு 631 கோடி ரூபாயும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.