சேலத்தில் மாதிரி வாக்கெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு, எப்படி வாக்களிப்பது என விளக்கி கூறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரோகிணி அனுப்பி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பலத்தப் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.