மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 31 ரன்கள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஒன்பதாவதாகக் களமிறங்கிய உமேஷ் யாதவ் மொத்தம் 10 பந்துகளைச் சந்தித்து 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவற்றில் 5 பந்துகளில் ஆறு ரன்களும், ஒரு பந்தில் ஒரு ரன்களும் எடுத்தார். தான் சந்தித்த முதல் 2 பந்துகளையும் மைதானத்துக்கு வெளியே பறக்கவிட்டதுடன், அதற்கு அடுத்த ஓவரிலும் 3 முறை ஆறு ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் சாதனையையும், 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவின் நாம் மெக்லீன் சாதனையையும் உமேஷ் யாதவ் தகர்த்துள்ளார்.

Exit mobile version