ATM- CDM-நூதன கொள்ளை கும்பலில் பிடிபட்ட 3-வது கூட்டாளி இவன்தானா??

ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு கொள்ளையன் நஜீம் உசேனை, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையின் பல பகுதிகளில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜிம் உசேன் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நஜிம் உசேன், சென்னையில் இருந்து மொத்தமாக 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சகானா முன்னிலையில் கொள்ளையன் நஜிம் உசேன் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜூலை 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கொள்ளையன் நஜிம் உசேன் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version