4 பேர் உணவக ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

மதுரையில், உணவகத்தில் மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட உணவக ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள உணவக ஒன்றில், அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர் மது அருந்தியுள்ளனர். இதனை, உணவக ஊழியர் முனீஸ்வரன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், உணவக ஊழியரை சரமாரியாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியது. இதன், சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்த உணவக ஊழியர் முனீஸ்வரனுக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உணவக ஊழியரை வெட்டிய வாசுதேவன், வசந்தன், சதீஸ், செல்வகுமார் ஆகிய நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மிலாது நபியையொட்டி மதுகடைகள் மூடப்பட்ட நிலையிலும், அந்த கும்பல் கள்ளச் சந்தையில் மது வாங்கி வந்து தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழந்து வருவதால் பொதுமக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது.

CCTV -காட்சிகளை காண

⬇⬇⬇                            ⬇⬇⬇ 

Exit mobile version