மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்த புவனகிரி, கம்மாபுரம் மக்கள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஆவர்களை வீடுகளிலேயே சிறை வைத்தனர் போலிசார். இதனால் அம்மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் சென்றிருந்தார். பிறகு அவரும் கைது செய்யப்பட்டார். அருண்மொழித்தேவன் கைது செய்யப்பட்டுள்ளதை கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கண்டித்து கண்டனப் பதிவு ஒன்றினை தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் மையச்சரடு பின்வருமாறு உள்ளது,A.Arunmozhithevan on Twitter: "#NewProfilePic https://t.co/0NUm4OCR1k" /  Twitter

“என்.எல்.சி நிறுவனத்தின் கைப்பாவையாக மாறி , தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ள இந்த விடியா திமுக அரசு, என்.எல்சி நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் புவனகிரி மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களில் உள்ள மக்களை, அவர்களது வீடுகளிலேயே போலிசாரால் சிறை பிடித்து வைத்துள்ள செயல் வெட்கக்கேடானது, அதை எதிர்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.அருண்மொழித்தேவன் உட்பட பலரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version