சென்னையில் தொடர் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

சென்னையில் தொடர் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் ஏழுகிணறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொருக்குப்பேட்டை,வண்ணாரப்பேட்டை,புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த அரவிந்தன் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த ஓசை மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்னிந்தியாவில் செயல்படும் கொள்ளையர்கள், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அருகே உள்ள கசந்தர் பகுதியில் ஒன்று கூடுவது வழக்கம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version