நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி மரணமடைந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஒயிட் தீவில் கடந்த திங்கட்கிழமை எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.இந்த விபத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் பணிகளை முடக்கி விட்டனர்.
இந்த சம்பவத்தில்16 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவ மாணவி கிரிஸ்டல் ஈவ் புரோவிட் என்பவர் தனது 21வது பிறந்தநாளை கொண்டாட ஒயிட் தீவுக்கு தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அங்கு நடந்த எரிமலை வெடிப்பில் சிக்கி அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.