தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினந்தோறும் அதிகரித்து வரும் பகல் நேர அனல் காற்றால் , மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல்காற்று வீசுவது நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 6 டிகிரி வரை உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், சில தினங்களில் வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்பிறகு வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது.