சென்னை உள்பட 16 இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுர், திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவியது. திருத்தணி, திருவண்ணாமலையில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வட மாவட்டங்களான 13 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.