தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தற்போது வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி திருத்தணியில் 40 டிகிரி செல்சியசும், வேலூர், திருச்சி, சேலம், மதுரை, தருமபுரி, கரூர், பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் எனவும், இதனால் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version