ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் புனிதமானது என்பதால் அரசுக்கும் ஆர்.பி.ஐக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கும் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் தொழிலதிபரும் இன்போசிஸின் துணை நிறுவனருமான நந்தன் நீலகேனியுடன் மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய அவர், ஆர்.பி.ஐக்கு தன்னாட்சியும், சுதந்திரமும் வேண்டும் என்றார். இருப்பினும் அரசுக்கும், ஆர்.பி.ஐக்கும் இடையேயான குறிக்கோள்கள் பொதுவானது என்பதால் சுமூக உறவு நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சில குறிக்கோள்கள் வித்தியாசப்படுவதால், அரசுக்கும் ஆர்.பி.ஐக்கும் இடையே முரண்பாடுகள் நீடிக்கிறது என்று கூறினார். இதுவரையிலும் ஆர்.பி.ஐயின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.