மிஷன் சக்தி குறித்து பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதி மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டம் மூலம் இந்தியா சாதனை நிகழ்த்தியதாக பிரதமர் மோடி நாட்டிற்கு அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
பிரதமரின் அறிவிப்பு தேர்தல் விதி மீறலா? என்பது பற்றிய ஆய்வு செய்ய விசாரணை குழுவை தேர்தல் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு கூடி ஆய்வு செய்ததில், பிரதமர் மோடி, கட்சியின் பெயரையோ சின்னத்தை பற்றியோ பேசவில்லை எனவே, அவரின் பேச்சில் எந்த தேர்தல் விதி மீறலும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.