இனி ரயில்வே வேலைகளுக்கு RRB தேர்வு கிடையாது

ரயில்வே  வேலைகளில் சேருவதற்கு RRB  தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். அதன்பின் நேர்முக தேர்வு நடைபெற்று வேலை வழங்கப்படும். ஆனால் இனி RRB தேர்வு நடத்தப்பட மாட்டது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

RRB தேர்வுக்கு பதிலாக UPSC தேர்வு வாரியம் , ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.

UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு மூலம் ரயில்வேயின் 5 பிரிவுகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுபவர். இந்த தேர்வில் வெற்றிப்பெறுபவர்கள் ரயில்வேயின் IRMS எனப்படும் இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனத்திற்கு சொந்தமான எந்த துறைகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர்.

Exit mobile version