பெட்ரோல், டீசல் விலையை தற்போது குறைக்க முடியாது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்டி அடித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்ததுபோல பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும் என்றும், ஆளுநர் அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏன் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க முடியாது என்றும்,
தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகும்போது மதிப்பு கூட்டு வரி குறைக்கப்படும் என்றும் கூறினார்.
அதிமுக அரசு அமைத்த ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார வல்லுநர் குழு அறிக்கையை, தற்போதைய அரசு அமல்படுத்த வேண்டுமென்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.