விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

தமிழ்நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள கேரளாவில் 22 புள்ளி 4 சதவீதம் பேரும், குஜராத்தில் 20 புள்ளி 5 சதவீதம் பேரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருந்தும், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, முதலில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாதததே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி இறக்குமதியில், தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மார்ச் மாதத்தில் 28 லட்சம் பேரும், மே மாதத்தில் 30 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக உத்தரபிரதேசம், அசாம், பீகார், ஜார்க்கண்ட் போன்று மாநிலங்களும் கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தியுள்ளன.

Exit mobile version