சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ, நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளார். அதில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
ஆயிரத்து 218 தொழிற்சாலைகள் உத்தர பிரதேசத்தில் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அரியானா மாநிலமும், ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.
புதுச்சேரியில் 3 தொழிற்சாலைகள் இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் ஒன்றுக்கூட தமிழ்நாடு, அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.