மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தோ, அல்லது சிறப்பு பிரிவு அந்தஸ்தோ வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆந்திரம், பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களுக்கு சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், நிதி ஆயோக் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு பரிவு அந்தஸ்து அளிக்கக் கூடாது என்றும், மத்திய அரசிடமும் சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்கும் திட்டம் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். மாநிலங்களை மேம்படுத்துவதற்காக நிதி ஆயோக் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.