டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்கியதை தொடர்ந்து, நிதி நிலைமையை காரணம் காட்டி புதிய கல்லூரிகளை அமைக்க முடியாது என்று சட்டப்பேரவையில் திமுக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவினாசி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், அன்னூரில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர், நிதிச்சுமை காரணமாக புதிய கல்லூரி அமைக்க இயலாது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆலங்குளம் அதிமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இடம் பார்க்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் இந்தாண்டு தொடங்குமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர், நிதிநிலைமை சரியான பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிதி நிலைமையை காரணம் காட்டி மாணவர்களின் கல்வி நலனில் திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.