கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிடுவதால் எந்த பிரச்னையுமில்லை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம்!

கறிக்கோழி, முட்டை சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என சுகாதாரத்துறை ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அரசு கால்நடை கிளை  மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் சந்தீப்  தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தனர். இதனையடுத்து, கயத்தார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீர் சுத்திகரிப்பு இயந்திர செயல்பாட்டையும் அவர்கள் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி இல்லாத இடங்களில், அனைத்து மக்களுக்கும் இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version