சளி-காய்ச்சல் ஏற்பட 200-க்கும் மேற்பட்ட வைரஸ் காரணமாக இருப்பதாகவும், சளி-காய்ச்சல் ஏற்பட்டால், கொரானா பாதிப்பு என அச்சப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி பிரத்யேகமாக பேட்டியளித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக மட்டுமே கொரோனா வைரஸ் பரவும் என அவர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், சந்தேகத்தின்பேரில் 54 பேருக்கு, பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப் பட்டதாகவும் கூறினார்.