"ஓட்டுனர் கனகராஜ் மரணத்தில் மர்மம் இல்லை" – சேலம் சரக டிஐஜி

கொடநாடு கார் ஓட்டுனர் கனகராஜ், எதிர்பாராத விபத்தில் மரணமடைந்ததாக ஒப்புக் கொண்ட அவரது சகோதரர் தனபால், தற்போது, முன்னுக்கு பின் முரணாக பேசுவதை, தகுந்த ஆதாரங்களுடன், அம்பலப்படுத்தியுள்ளார் சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்…..

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டுநர் கனகராஜ், குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், வலது புறமாக வந்த போது, பெங்களூருவில் இருந்து வந்த கார் அவர் மீது மோதியதை குறிப்பிட்டுள்ளார். இதனை விபத்து என ஒப்புக் கொண்ட, கனகராஜின் சகோதரர் தனபால், தற்போது, காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றும், மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதும் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version