கேங்மேன் தேர்வில் தவறு நடந்தால் அதற்கு பொறுப்பேற்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மின்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, மின்துறையில் உள்ள, 50 ஆயிரத்து 293 காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, கேங்மேன் பதவிக்காக ஐந்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட தேர்வுகளை, 15 ஆயிரம் பேர் எழுத உள்ளதாக கூறினார். மின்துறையில் நடைபெறும் தேர்வுகளில் எந்த தவறும் நடைபெறாது என அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார். ஏதேனும் தவறுகள் நடந்தால், அதற்கு பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.