நாடு முழுவதும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்புவரை இந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் செய்தியை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
இத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புதிய கல்வி கொள்கையை வகுக்கும் கஸ்தூரி ரங்கன் குழு எந்த மொழியையும் கட்டாயமாக்க பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.