சான்று பெற்ற வீடுகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது – மத்திய அரசு

சான்று பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்கும் போது ஜி.எஸ்.டி விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கட்டுமானப் பணிகள் முடிந்து அதற்கான சான்று பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்கும் போது ஜி.எஸ்.டி விதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

மேலும் கட்டுமானப் பணி தொடங்கும் போதோ, கட்டுமான நிறைவு சான்றிதழ் பெறாமல் உள்ள வீடுகளை வாங்கினால் ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களின் கீழ் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கான 8 சதவீத ஜி.எஸ்.டியை, கட்டுமான நிறுவனங்கள் தங்களது வரி வரவிலிருந்து கழித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் புதிததாக வீடு வாங்குபவர்களுக்கு நிதிச்சுமை குறையும்.

Exit mobile version