புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை

புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்தும் தாக்குதலால் பலர் கொல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் தான் நிகழ்த்தியது என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று கூறிய அவர், இதற்காக பாகிஸ்தான் ஏன் ஒருவருடமாக திட்டமிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்திரத்தன்மையை பாகிஸ்தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version