பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கடந்த 18ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றையதினம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்தது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை அளித்தார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சிதம்பரம் மக்களவைக்குட்பட்ட பொன்பரப்பியில் வாக்குப்பதிவின்போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்திருப்பதாக கூறினார். மேலும், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை என்றார். இதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் 10 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.